ஜெயங்கொண்டம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 32 வயதுடைய பெண் ஒருவரை, அப்பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஜூன் 12ஆம் தேதி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த குற்றவாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தின்கீழ், நடவடிக்கை எடுக்க ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்தார்.
அவரின் பரிந்துரையை மாவட்ட கண்காணிப்பாளருக்கு அனுப்பியதில், மாவட்ட கலெக்டர் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.. இதையடுத்து, பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் சிறையிலடைத்தனர்.