சேரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
இயக்குனர் சேரன் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு, சொல்ல மறந்த கதை, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என பல திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் தமிழ்குடிமகன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
இந்த படத்திற்கு ஷாம் சி.எஸ் இசையமைத்திருக்கின்றார். அண்மையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கின்றது. சாதியினால் அவதிப்படும் குடும்பத்தை காட்சிப்படுத்துவது போல இந்த டீசர் உருவாகி இருக்கின்றது. இந்த டீசர் தற்போது சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகின்றது.
https://youtu.be/gfpSbRacy1o