இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதலில் ரம்ஜான் பண்டிகையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமானோர் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் ரம்ஜான் பெருநாள் அன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பண்டிகை கொண்டாடி கொண்டிருந்த ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இக்கொடூர தாக்குதலில் அந்த குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பியிருக்கிறது. அந்த சமயத்தில் குடும்ப தலைவர் முகமது அல்-ஹதிதி வீட்டில் இல்லை. எனவே அவரும் தப்பியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ராக்கெட் அந்த பகுதியில் இல்லை. குழந்தைகளும் பெண்களும் தான் மகிழ்ச்சியுடன் பெருநாளை கொண்டாடி கொண்டிருந்தார்கள்.
இப்படி கொடூரமாக கொல்லப்படும் அளவிற்கு அவர்கள் என்ன தீங்கு செய்தார்கள்? குழந்தையுடைய தொடை எலும்பு முறிந்துவிட்டது. உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டிருப்பதாக வேதனையுடன் கண்ணீர் வடித்துள்ளார்.