28 வயதுள்ள ஒரு பெண் வினோத நோயால் பாதிக்கப்பட்டு இரவில் மட்டுமே வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆண்ட்ரியா ஜவோன் மன்றாய் என்ற 28 வயதில் பெண் வசித்து வருகிறார். இவர் செரோடர்மா பிக்மண்டோசம் என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நோய் மில்லியன் கணக்கான நபர்களில் ஒருவருக்கு மட்டும்தான் ஏற்படும். இந்த நோய் தோல் பகுதியின் உணவு திறனை அதிகரிக்கிறது. மேலும் இவர் 28 முறை சரும புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் மீண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “எனக்கு ஏற்பட்ட இந்த நோயை கண்டுபிடிக்க பல நாட்கள் ஆனது. இதனால் என் உடல் வேகமாக மோசமடைந்தது. அதனால் நான் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. மேலும் இரவில் மட்டுமே என்னால் வெளியில் செல்ல முடியும். மேலும் மருத்துவர் பார்ப்பதற்காக பகலில் செல்ல வேண்டிய நிலை உண்டாகும். அப்போது நான் எனது உடலை பாதுகாப்பாக மூடி கொண்டு செல்வேன்” என கவலையுடன் கூறியுள்ளார்.