Categories
தேசிய செய்திகள்

கொரோனா பீதி… 6,000 கோழிகளை உயிருடன் புதைத்த சம்பவம்… வைரலாகும் வீடியோ!

கர்நாடகாவில் கொரோனா பீதியின் காரணமாக 6 ஆயிரம் பிராய்லர் கோழிகளை உயிருடன் புதைக்கப்பட்ட வீடியோ வைரலானதையடுத்து சமூகவலைதளத்தில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கும் கொரோனா இதுவரை 4600க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கின்றது. மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் இந்தியாவும் ஓன்று. இந்தியாவிலும் கொரோனா வைரசால் இதுவரையில் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடகாவில் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே கொரோனா  பிராய்லர் கோழியால் தான் பரவுவதாக, கொரோனா வைரஸை விட வேகமாக வதந்தி பரவி வருகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் மக்கள் பீதியினால் பிராய்லர் கோழியை வாங்காமல் புறக்கணித்துள்ளனர். ஆனால் கொரோனா கோழியின் மூலம் பரவாது என்று அரசு தெளிவாக கூறுகிறது. இருப்பினும் பீதியின் காரணமாக மக்கள் பிராய்லர் கோழியை வாங்குவதை நிறுத்தியுள்ளனர்.

Image result for A dejected farmer Nazeer Makandar from Lolasoora village in #Gokak, #Belagavi decided

இந்தநிலையில் கர்நாடகாவில் கொரோனா பீதியின் காரணமாக 6 ஆயிரம் பிராய்லர் கோழிகளை உயிருடன் புதைக்கப்பட்ட வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் சமூகவலைதளத்தில்  கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை ட்விட்டரில் நிரஞ்சன் காக்கரே (Niranjan Kaggere)  என்பவரால் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மிகப்பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டிருக்கிறது. அந்த பள்ளத்திற்குள் லாரியில் உயிருடன் கொண்டு வரப்பட்ட 6 ஆயிரம் பிராய்லர் கோழிகள் கொட்டப்படும் காட்சியும் இருக்கின்றது.

மேலும் “கொரோன வைரஸ் காரணமாக விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, பெலகாவி, கோகாக்கிலுள்ள லோலாசூரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பதற்றமடைந்த விவசாயி நசீர் மகந்தர் தனது கோழி பண்ணையிலிருந்து கோழியை அடக்கம் செய்ய முடிவு செய்தார்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |