பிரபலமான யூடியூபரான சையத் பாஷைத் அலி தன்னுடைய யூடியூப் சேனலில் எப்போதும் அதிக வித்தியாசம் உடைய ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு வாழ்வது தொடர்பான வீடியோக்களை வெளியிடுவார். இவருடைய வீடியோக்கள் வலைதள வாசிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர் அடிக்கடி வயது அதிகரித்த நபரை வயது குறைந்த ஒரு பெண் திருமணம் செய்வது தொடர்பான வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 70 வயது முதியவரும் 19 வயதும் இளம்பெண்ணும் திருமணம் செய்து கொண்ட ஒரு சம்பவத்தை தான் தன்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
அதாவது பாகிஸ்தான் நாட்டில் லியாகத் அலி (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஷூமைலா அலி என்ற 19 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்கள் தினசரி காலை நடை பயிற்சி செல்லும் போது சந்தித்துள்ளனர். அப்போது முதியவருக்கு இளம்பெண் மீது காதல் வரவே இளம் பெண்ணை கவர முதியவர் முடிவு செய்துள்ளார். இதனால் ஒருநாள் காலை முதியவர் பாட்டு பாடிக்கொண்டே இளம்பெண் பின்னால் சென்றுள்ளார்.
இந்த பாடல் வரிகள் இளம் பெண்ணின் காதுகளுக்கு கேட்கவே அதன்பின் இருவரும் பழகி காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக முதியவர் கூறும் போது காதலுக்கு வயது வித்தியாசம் என்பது கிடையாது. நான் மனதளவில் இன்றும் இளமையாக இருப்பதாகவே உணர்கிறேன். என்னுடைய மனைவியின் சாப்பாடு எனக்கு பிடித்து விட்டதால் தற்போது ஹோட்டலில் சாப்பிடுவதை தவிர்த்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்த திருமணம் குறித்து இளம்பெண் கூறும் போது தன்னுடைய பெற்றோர்கள் முதலில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பின் அவர்களை சமாதானப்படுத்தி நான் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்படியாக அனுமதி கொடுக்கும் வரை வயது வித்தியாசம் என்பது பெரிய விஷயமே கிடையாது என்று லியாகத் மற்றும் ஷூமைலா கூறியுள்ளனர்.