Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ரத்தானது திருமணம்… ஆனாலும் இந்தஜோடி செய்த செயல்… நெகிழவைத்த சம்பவம்!

கொரோனா காரணமாக திருமணம் ரத்தானதையும் பொருட்படுத்தாமல் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஜோடி தேசிய சுகாதார சேவை ஊழியர்களை நெகிழ வைத்துள்ளனர் .

கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததன் காரணமாக கடைசி நேரத்தில் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஜோடிக்கு திடீரென திருமணம் ரத்தாகி விட்டது. இதனால் அந்த ஜோடி மதிய உணவுக்காக கொடுக்கப்பட்ட முன் பணத்தை திரும்ப வாங்காமல், அதனை மாற்று வழியில் பயன்படுத்த முடிவு செய்தது. 

Image result for The couple's wedding was cancelled because of the coronavirus outbreak ... Couple whose wedding was cancelled donate food to NHS staff at Hull

அதன்படி, அவர்கள் ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் 250 ஹாக் ரோஸ்ட் சாண்ட்விச்களை royal hull infirmary மருத்துவமனையில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கு மதிய உணவாக வழங்கினர்.

Image result for Couple whose wedding was cancelled donate food to NHS staff

இந்த சம்பவத்தை பார்க்கும்போது தனக்கும் தன்னுடன் வந்த தன்னார்வலர்களுகும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அறக்கட்டளை நிறுவனர் பால்மாட்சன் தெரிவித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |