கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தை ஓன்று கண்ணாடி பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்ட காட்சி கண்கலங்க வைக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள், மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இந்நிலையில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இதுவரை தங்கள் நாட்டில் கொரானா வைரஸுக்கு 304 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் 14,000-த்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட குழந்தை ஓன்று கண்ணாடி பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் அருகில் சென்றபோது தூக்கும்படி அவரிடம் கைகளை நீட்டுகிறார். இந்த காட்சி அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.
https://twitter.com/IiStraff/status/1223505925459320832