Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி சண்டை… மனைவியை கொன்றுவிட்டு… தானும் தற்கொலை செய்துகொண்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்…!!

நெய்வேலி அனல் மின் நிலையத்தின் மத்திய பாதுகாப்பு படை வீரர் தனது மனைவியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை காவலராக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எக்கேலா கணபதி (33) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சந்தோஜி (24) என்ற மனைவி இருந்தார்.. இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்து முடிந்தது. பின்னர் இந்த தம்பதியர் நெய்வேலி புதுநகர் 22 வட்டம் ஹாஸ்டல் டைப் குடியிருப்பில் வசித்து வந்தனர்.. கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது.. இதில் கடும் கோபமடைந்த எக்கேலா கணபதி தன்னுடைய மனைவி சந்தோஜியின் கழுத்தை நைலான் கயிறு கொண்டு இறுக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரும் வீட்டிலுள்ள அறையில் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் மூடி இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளனர்.. அப்போது எக்கேலா கணபதி தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். பின்னர் உடனே இதுகுறித்து அந்தபகுதி மக்கள் தெர்மல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவரது மனைவியும் கழுத்து இறுக்கப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்..

இதனைத் தொடர்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |