Categories
தேசிய செய்திகள்

4 வயது குழந்தையை கடத்த முயன்ற நபர்கள்… சிங்கப்பெண்ணாக மாறி காப்பாற்றிய தாய்… வெளியான சிசிடிவி காட்சி..!!

குழந்தையை கடத்த முயற்சித்த நபர்களிடம் இருந்து சிறுமியின் தாய் தைரியமாகப் போராடி தடுத்து நிறுத்திய சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கிழக்கு டெல்லியின் ஷகர்பூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்த 2 பேர்’சேல்ஸ்மேன்’ என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் தாகம் எடுக்கிறது குடிக்கத் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.. அப்போது, அந்தப் பெண் தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற பின், வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த அவரின் 4 வயது குழந்தையைக் கடத்த முயற்சி செய்தனர்.. இதையடுத்து, குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த பெண், துணிச்சலுடன் கடத்தல்காரர்களின் பைக்கை கீழே தள்ளிவிட்டு, போராடி தன்னுடைய குழந்தையையை அவர்களிடமிருந்து மீட்டார்..

பின்னர் அந்த பெண் சத்தம் போட்டவுடன் கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பிஓட முயன்றபோது, அக்கம்பக்கத்தினர் சேர்ந்து அவர்களைத் தடுத்துநிறுத்த முயன்றனர்.. இருப்பினும், கடத்தல் காரர்கள் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் அனைத்தும் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்தசம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்துப் பேசிய டெல்லி துணை ஆணையர் ஜாஸ்மீத் சிங், ”கடத்தல்காரர்கள் பயன்படுத்திய பைக் எண் போலியானது என தெரியவந்தது.. பின்னர் பைக்கின் உரிமையாளர் தீரஜ் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தியதில், குழந்தையின் மாமா உபேந்தர் என்பவரின் திட்டத்தின்படி சிறுமியைக் கடத்த முயன்றது தெரியவந்தது. சிறுமியைக் கடத்தி ரூ 35 லட்சம் வரை பணம் பறிக்க இவர்கள் திட்டம் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது” என்றார்.

Categories

Tech |