சுவிட்சர்லாந்தில், வாகனம் ஒன்று நகைக்கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் என்ற மண்டலத்தில் கடந்த புதன்கிழமை அன்று மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று அங்குள்ள நகைக்கடைக்குள் வேகமாக புகுந்துள்ளது. இதில் ஐந்து நபர்கள் காயமடைந்துள்ளனர். மட்டுமல்லாமல் 1,00,000 பிராங்குகள் மதிப்புடைய பொருட்கள் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய அந்த ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது 19 வயதான அந்த இளைஞர் கூறுகையில், “நான் காரில் சென்று கொண்டிருந்தபோது, என் முன்னாள் காதலி எனக்கு முன்பு சென்று கொண்டிருந்தார். அவரை முந்துவதற்கு பலமுறை முயற்சி செய்தேன்.
ஆனால் அவர் வேகமாக சென்றதால், அவரை முந்துவதற்காக நானும் வேகமாக வாகனத்தை இயக்கியபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, கார் நகைக் கடைக்குள் மோதி நின்று விட்டது” என்று கூறியிருக்கிறார். மேலும் நகைக்கடை உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
எனினும் அவரின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.