Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய சிறுவன்……”அறியாமையால் அகால மரணம்” விழுப்புரத்தில் சோகம்….!!

விழுப்புரத்தில் பல்பொடி என நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்துள்ள கோணலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம். பதிமூன்று வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்ரீராம் பல்பொடி என்று நினைத்து எலி பேஸ்டை எடுத்து பல் துலக்கியுள்ளார். இதில் எலி  பேஸ்ட்டை முழுங்கிய அவர் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார்.

Image result for எலி பேஸ்ட்

பின் அவரை மீட்ட அவரது பெற்றோர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ஸ்ரீராம் பரிதாபமாக உயிர் இழந்தார். பின் சம்பவம் குறித்து திண்டிவனம் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்பொடி என்று நினைத்து எலி பேஸ்டை உண்டு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |