அட்லாண்டிக் பெருங்கடலில், ஒரு பிளாஸ்டிக் பாட்டில் 3800 கிமீ தொலைவு கடந்து வந்து ஒரு சிறுவனின் கண்ணில்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிரிஸ்டியன் சான்டோஸ் என்ற 17 வயது சிறுவன் அட்லாண்டிக் பெருங்கடலில் ஆழமான பகுதியில் மீன் வேட்டை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு பிளாஸ்டிக் பாட்டில் அவரின் கண்ணில் பட்டுள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் வருடத்தில் அமெரிக்காவில் உள்ள ரோட் தீவு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சிறிய காகிதத்தில் ஏதோ எழுதி ஒரு பாட்டிலில் வைத்து வீசியிருக்கிறார்.
அந்த பாட்டில் தான் கிறிஸ்டியன் கண்ணில் பட்டுள்ளது. அதில் எழுதப்பட்டிருந்ததாவது, “இது நன்றிக்காக எழுதப்படுவது, எனக்கு 13 வயது, வெர்மோன்ட் பகுதியில் வசிக்கிறேன். ரோட் தீவில் இருக்கும் என் குடும்பத்தினரை காண வந்திருக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஒரு மின்னஞ்சல் முகவரியும் இருந்தது.
குறிப்பிட்ட அந்த மின்னஞ்சல் முகவரிக்கு கிறிஸ்டியனின் தாய் மெயில் அனுப்பியிருக்கிறார். எனினும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே இதனை எழுதிய நபர் பார்க்கும் வரை பகிருங்கள் என்று இணையதளத்தில் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.