சிவகங்கையில் பாஜக பிரமுகர் ஒருவர் 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மேலூர் சாலை பொதிகை நகரை சேர்ந்தவர் சிவகுரு துரைராஜ். 67 வயதான இவர் சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் செவிலியர் பயிற்சி மற்றும் கேட்டரிங் தொழில் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் இவர் பா.ஜ.கவின் சிவகங்கை மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் 19 வயது மாணவி ஒருவர் படித்து வருகின்றார்.

இதையடுத்து சிவகங்கை நகர காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிவகுருவை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து நகர காவல் நிலைய ஆய்வாளர் மோகன் சிவகுருவிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பாஜக பிரமுகர் ஒருவர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.