இத்தாலியில் பேட்டரியில் இயங்கும் டாக்ஸி ஒன்று பயணிகளை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் தலைநகரான ரோமில் பயணிகளை விமான நிலையத்திலிருந்து நகரங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் பேட்டரியில் இயங்கும் பறக்கும் டாக்ஸி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பறக்கும் டாக்ஸியை ஜெர்மனியை சேர்ந்த volocopter என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
மேலும் இந்த டாக்ஸி பயணிகளின் உடமைகளை வைக்க தனி லக்கேஜ் கம்பார்ட்மெண்ட்களுடனும், இரண்டு பேர் பயணம் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த டாக்ஸியில் மின் மோட்டார்கள் 18 பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த டாக்ஸி திட்டத்தை வருகின்ற 2024-ஆம் ஆண்டு தலைநகர் ரோமில் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.