குமரானந்தபுரத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பனியன் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் குமரானந்தபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு வயது 39.. பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலைபார்த்து வரும் இவர், வசித்துவரும் வீட்டுக்கு அருகில் குடியிருந்துவரும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் அனுராதா தலைமையிலான போலீசார் , செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.