Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஒரு வயது குழந்தைக்கு….அடிக்கடி ஏற்பட்ட வயிற்று வலி….” ஸ்கேன் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி”… எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையின் உணவுக்குழாயில் இருந்த பின்னூசியை மருத்துவர்கள் எச்சரிக்கையாக எடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு நிதிஷ் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு திடீரென்று மூச்சு விட சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அழுது கொண்டே இருந்துள்ளார். குழந்தையின் பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர். பின்னர் காது மூக்கு தொண்டை பிரிவில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தபோது மருத்துவர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தையின் உணவுக்குழாயில் பின்னூசி திறந்த நிலையில் குத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மயக்கவியல் துறை மருத்துவர்கள் உடனே குழந்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பின்னூசியை அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபி மூலம் பாதுகாப்பாக வெளியில் எடுத்தனர். தற்போது சிகிச்சை முடிந்து குழந்தை நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறும்போது குழந்தைகளுக்கு எதை வேண்டுமானாலும் வாயில் வைத்துக் கொள்ளும் சுபாவம் இருக்கும். அவ்வாறு பொம்மைகளில் உள்ள பட்டன், பேட்டரி, குண்டூசி, சட்டை பட்டன்கள், நாணயங்கள் போன்றவற்றை வாயில் வைக்கும்போது அது விழுக்கென்று உள்ளே சென்றுவிடும். அவை உணவுக் குழாய் மூச்சுக் குழாய்க்குள் சென்று விடும். எனவே குழந்தைக்கு  பெற்றோர்கள் விளையாட கொடுக்கும் பொழுது மிகவும் கவனமுடன் பார்த்து கொடுக்கவேண்டும். நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற உணவுப் பொருட்களை வாயில் போடக்கூடாது. திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டால் குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்தனர்.

Categories

Tech |