இருபது வயது இளைஞர் ஒருவர் தெற்கு லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் ரயில் நிலையம் அருகே குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 8.45 மணி அளவில் பிரிக்ஸ்டன் நிலத்தடி குழாய் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் இளைஞர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் வலியில் துடித்தபடி கிடந்துள்ளார். அதனைக் கண்ட சிலர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏர் ஆம்புலன்ஸ் மற்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை சில நிமிடங்களில் அங்கு வந்துள்ளது.
ஆனால் அந்த இளைஞர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.