ஃபேன் வேகத்தை குறைக்க சொன்னதால் ஆத்திரமடைந்து மாடியிலிருந்து குதித்து 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி பிரிக்லின் சாலையில் அமைந்திருக்கும் லும்பினி ஸ்கொயர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தான் அமித்.. இவருக்கு ரூஹி(15) என்ற மகள் உள்ளார்.. ரூஹி தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்து 11ஆம் வகுப்பு செல்ல உள்ளார்.. இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு விடுமுறை காரணமாக வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் ரூஹி.. அப்போது இவரது சித்தப்பாவின் மகள் ஃபேனின் வேகத்தை குறைத்து வைக்கும்படி ரூஹியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் வேகத்தை குறைக்க முடியாது என்று ரூஹி கூற, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.. இதனால், அருகிலுள்ள அறைக்குச் சென்று ஃபேனை வேகமாக வைத்து டிவி பார்க்கும் படி ரூஹியிடம் அவரது சித்தி கூறியுள்ளார்.. இதனால், ஆத்திரமடைந்த ரூஹி ஓடிவந்து 12ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்தசம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து போலீசார், ரூஹியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்தசம்பவம் தொடர்பாக ரூஹியின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.