Categories
தேசிய செய்திகள்

“கழிவறையில் வைத்து” 24 வயது இளம்பெண்ணை சீரழித்த 15 வயது சிறுவன்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டோராடூன் பகுதியில் ஒரு பிரபலமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம் பெண் கடந்த வெள்ளிக்கிழமை கழிவறையில் தன்னுடைய செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது 15 வயது சிறுவன் ஒருவன் திடீரென கழிவறைக்குள் நுழைந்து ஹாய்‌ என்று கூறியுள்ளான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் பெண்கள் கழிவறைக்குள் எப்படி வரலாம் என கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு முன் பின் தெரியாத நபர்களிடம் நான் பேசமாட்டேன் உடனே வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் அந்த சிறுவன் திடீரென கழிவறையின் கதவை மூடிவிட்டு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் இளம்பெண் கத்தி கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார். ஆனால் கழிவறை மூடப்பட்டு இருந்ததால் யாருக்கும் சத்தம் கேட்கவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஹோட்டலில் குடும்பத்துடன் வசித்து வந்த சிறுவன் ஹோட்டலை காலி செய்யும் நேரத்தில் இப்படி ஒரு கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்து றையினர் சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஒரு இளம் பெண்ணை சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |