காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்து வருகின்றார்.
ஷீலா ராஜ்குமார் தமிழ் சினிமாவின் வளர்த்து வரும் நடிகையாக வளம் வருகிறார். இவர் சின்ன திரையில் ”அழகிய தமிழ் மகள்” சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே, இவர் நடித்திருந்த “டூ லெட்” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்றது. தியேட்டர்களில் வெளியான பின் படத்திற்கும் இன்னும் அதிக பாராட்டுகள் கிடைத்தது. இதனால் சீரியலை விட்டுவிட்டு சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி விட்டார்.
தமிழில், டூலெட் மற்றும் திரௌபதி , மலையாளத்தில் “கும்பளங்கி நைட்ஸ்” என்கிற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அந்த படத்திற்கு கேரள அரசின் விருது கிடைத்தது. இந்நிலையில், ஷீலா ராஜ்குமார் அளித்த பேட்டியில், தற்போது 6 படங்களில் நடித்து வருகிறேன். அதில் 2 படங்கள் லாக் டவுன் சமயத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. இன்னும் 4 படங்களின் படப்பிடிப்புகள் இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது.
அதை ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் பாலாஜி மோகன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மண்டேலா’. இதில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். அதனை அடுத்து கிரைம் திரில்லர் படம் ‘வாஞ்சை’ அதில் நடிகையாக நடித்துள்ளேன். “டூ லெட்”, “கும்பளங்கி நைட்ஸ்”, படத்திக்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக உள்ளது. ரசிகர்கள் எப்போதும் என்னை பார்க்கும்போதெல்லாம் பக்கத்து வீட்டு பெண் போல எதார்த்தமாக இருக்கிறீர்கள் எனக் கூறுகின்றனர். நானும் அப்படிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் என்றார்.