Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

2 கோடிக்கு துணி எடுத்த நபர்…. பணம் கொடுக்காமல் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

நூற்பாலையில் ரூ.2 கோடி மதிப்பிலான துணி வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்த நபரை காவல்துறையினர் வலைவீசி  தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வசித்து வருபவர் பூபதி. இவர் அந்த ஊரில் பருத்தியிலிருந்து  செயற்கை இழையிலிருந்தும் கிடைக்கும் பஞ்சை மூலப்பொருளாக கொண்டு நூலாக மாற்றும்  நூற்பாலை  ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த தினேஷ்குமார் ஜாங்கிட் என்பவர் பூபதிக்கு அறிமுகமாகியுள்ளார்.

இதையடுத்து  தினேஷ்குமார் ஜாங்கிட் பூபதியிடம்  2 கோடி மதிப்புள்ள துணியை  வாங்கியுள்ளார்.  ஆனால் அவர்  பூபதியிடம் பணத்தை  கொடுக்காமல்  ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பூபதி திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ்குமார் ஜாங்கிட்டை  தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |