Categories
சினிமா தமிழ் சினிமா

ஹேய்….”அழுமூஞ்சி” ஏன் இப்படி போகுது முகம்… கலாய்த்து தள்ளிய துல்கர் சல்மான் …!!

துல்கர் சல்மான் அதிதிராவ்வை கலாய்த்து பிறந்த நாள் வாழ்த்து கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

துல்கர் சல்மான் முன்னணி நடிகராக வளம் வருகிறார் . இவர் தற்போது ‘ஹே சினாமிகா’ என்கிற படத்தில் நடிக்கிறார்.கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றிய  டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இந்த படத்தை இயக்குகிறார். கதாநாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ்  நடிக்கின்றனர். கொரோனா தாக்கம் ஏற்படுவதற்கு முன்பே படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களுக்கு மட்டுமே நடைபெற்றது. அதன் பின் கொரனாவின் தாக்கத்தால் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் அதிதிராவ் பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்து சொன்ன துல்கர் சல்மான், படப்பிடிப்பில் போது  இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார், அதில் அதிதி ராவ் அழுமூஞ்சி என செல்லமாக கிண்டல் செய்தார் துல்கர். இந்த புகை படத்தில் அதிதிராவ் ஏதோ ஒரு விஷயத்திற்காக சங்கடப்பட்டுக் கொண்டு முகத்தை வைத்துள்ளார். இந்தப்படத்தின் சில தமிழ் வசனங்களை அவர் சரியாக சொல்ல தடுமாறியதால், துல்கர் சல்மான் அவரை கிண்டல் செய்துள்ளாராம்.

Categories

Tech |