Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தீரா பொடுகு தொல்லையா…? அப்போ இதை செய்து பாருங்கள்…!!

தலையில் பேன் பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ பலருக்கும் பொடுகு தொல்லை இருக்கும் இதனால் மனதில் வருத்தம் இருந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் பொடுகு தொல்லையிலிருந்து விடுபட

வெந்தயம்

அதிக மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை நன்றாக அரைத்து அனைத்து முடியிலும் படும்படி தலையில் தேய்த்து வருவதால் கூந்தலும் பலம்பெறும் பொடுகுத் தொல்லையும் குறையும் முடி உதிர்தலையும் தடுக்கும்.

எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளை கரு

சிட்ரிக் ஆசிட் கொண்ட எலுமிச்சை சாறு மற்றும் முட்டை வெள்ளை கருவை சேர்த்து தலையில் தேய்த்து வருவதால் பொடுகினால் ஏற்படும் அரிப்பை குறைத்து தலைமுடியை அழகானதாக மாற்றியமைக்கும்.

வேப்பிலை

வேப்ப இலையை மையாக அரைத்து தலையில் பூசி வருவதனால் பொடுகு தொல்லை தீரும். தண்ணீரில் வேப்பிலையை போட்டு நன்றாக காட்சி அந்த நீரை வைத்தும்  தலைமுடியை அலசலாம். இதனால் தலைமுடி வலிமை பெறும்.

Categories

Tech |