கொரோனா வராமலிருக்க அடிக்கடி கைகழுவ சொல்லப்படும் சூழலில்டெட்டோல் மற்றும் லைப்பாய் தயாரிப்பு நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளன.
டெட்டோல் தயாரிப்பு நிறுவனம் மீது லைப்பாய் தயாரிப்பு நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. டெட்டோல் விளம்பரத்தில் தனது லைப்பாய் சோப் நிறம், அளவு மற்றும் வடிவத்தில் சோப்பை காண்பித்து கைகழுவ இதுபோன்ற பார் சோப்புகள் உதவாது, டெட்டோல் உபயோகியுங்கள் என்று கூறுவதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சோப்பு போட்டு கை கழுவுங்கள் என்று நாடு முழுவதும் பரப்புரை செய்யப்படும் நிலையில் டெட்டால் விளம்பரம் மக்களை திசை திருப்பும் செயலில் ஈடுபடுகிறது என்று இந்துஸ்தான் யுனிலிவர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த விளம்பரத்தை வரும் 21ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் லைப்பாய் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கை கழுவுவதில் நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்ட வழக்கு டெட்டோல் லைபாய் நிறுவனங்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.