உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43000த்தை தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 8,72,447 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,84,482 பேர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் பார்த்தால் இத்தாலி , ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நேற்று உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தது.
உலகிலேயே மிக அதிகபட்சமாக இத்தாலியில் 12,428 பேர் உயிரிழந்துள்ளனர். அங்க கொரோனாவால் 1,05,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் இத்தாலியில் 837 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 40,53 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஒரே நாளில் 865 பேர் உயிரிந்துள்ளனர்.
ஸ்பெயினிலும் பலியானோர் எண்ணிக்கை 10,000 நெருங்கி வருகிறது. அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 102,136 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,053 ஆகவும் உள்ளது. பிரான்சில் 3,523 பேரும், ஈரானில் 3,036 பேரும், ஐரோப்பியாவில் 1,789 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 400க்கும் மேல் சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 38 பேர் பலியான நிலையில், 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.