முருங்கை டீயை, தினந் தோறும் காலையில் பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை பொடி – 2 தேக்கரண்டி
கிரீன் டீ பொடி – 2 தேக்கரண்டி
புதினா இலைகள் – 8
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
கருப்பட்டி – இனிப்பிற்கு தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தை எடுத்து அதை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் முருங்கைக்கீரை பொடி 2 தேக்கரண்டி, கிரீன் டீ பொடி 2 தேக்கரண்டி, புதினா இலை 8 மற்றும் கருப்பட்டி இனிப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும் .கொதித்த பின்னர் டீயை வடிகட்டி எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி பிழிந்து விட்டு பருக வேண்டும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் காலை பருகி வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பது மட்டுமில்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இரத்தம் அதிகரிக்க செய்யும். உடல் எடை குறைய வேண்டுமென நினைப்பவர்கள் குடிக்கலாம். ஆனால் கர்ப்பிணி பெண்கள் இதனை குடிப்பதை தவிர்க்க வேண்டும். நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற உடல் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடித்து வரலாம். சூப்பரான முருங்கை டீ உடலுக்கு பல நன்மைகளை கொடுக்க கூடியது..!!