இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி 196க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகத்தையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் 857,487 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 178,034 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 42,107 பேர் இறந்துள்ளனர். இந்த வல்லரசு நாடான அமெரிக்காவை சின்னாபின்னமாக்கியுள்ளது. அதே போல இங்கிலாந்தையும் கொரோனா வைரஸ் சிதைத்துள்ளது.
அங்கு மட்டும் 25,150 பாதிக்கப்ட்டுள்ளதில், 1,789 உயிரிழந்து , 135 குணமடைந்துள்ளனர். 23,226 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 163 பேருக்கு இக்கட்டான நிலையில் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. அதிகமாக முதியவர்களுக்கு மரணம் ஏற்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.