Categories
மாநில செய்திகள்

தமிழக D.G.P_யை நீக்க கோரிய வழக்கு…… தள்ளுபடி செய்தது மதுரை நீதிமன்றம்…!!

தமிழக டிஜிபி ராஜேந்திரனை நீக்கம் செய்யக் கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது . 

மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் கடந்த 2017 ஆம் ஆண்டு பணி நீட்டிப்பில் DGP_ஆக இருந்து வருகின்றார். இவர் மீது குட்கா உள்ளிட்ட பல்வேறு முறைகேடு வழக்குகள் உள்ளன . எனவே  நேரத்தில் இவரை டிஜிபி இருந்து வேறு பதவியிலிருந்து மாற்ற  வேண்டும். மேலும் புதிய DGP_யாக நியாயமான அதிகாரியை நியமிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டி.ஜி.பி ராஜேந்திரன் குறித்த புகாரை தெரிவித்துள்ளது தொடர்பாகவும் , இதை ஒரு ஆவணமாக மற்றும் சாட்சியமாக கருதி இந்திய தேர்தல் ஆணையம் விசாரித்து தகுந்த முடிவு எடுக்கலாம் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .

Categories

Tech |