Categories
அரசியல்

அவசர பாஸ் எங்கு பெற வேண்டும்…? பதிலளித்த காவல்துறை…!!

ஊரடங்கு உத்தரவு காலத்தில் வெளியூருக்கு செல்வோர் எங்கு அவசரப் பாஸ்  வாங்க வேண்டும் என்பது குறித்து தமிழக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் பெருநகராட்சி ஆணையரிடம் அவசர பாஸ்  பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதர மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்ல மண்டல அதிகாரியிடம் அவசர பாஸ்  பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாவட்டத்திற்குள் பயணிப்பவர்கள் வட்டாட்சியரிடம் பாஸ் பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு வெளியே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் எங்கிருந்து பயணம் தொடங்குகிறதோ அந்த மாவட்ட ஆட்சியரிடம் அவசர பாஸ் பெற வேண்டும் என தமிழக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. நெருங்கிய உறவினர் திருமணம், இறப்பு, அவசர மருத்துவ தேவை ஆகிய மூன்று காரணங்களுக்காக மட்டுமே பாஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |