Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் மேலும் 25 பேர் அனுமதி …!!

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் நாடு முழுவதும் கொரோனா பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்தியாவில் வேகமாக பரவி வரும்  கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருக்கும் நிலையில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக டெல்லி, தமிழகம், மகராஷ்டிரா என கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அனைவரும் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எங்கெல்லாம் ? சென்றார்கள் என்று மத்திய மாநில அரசுகள் கண்டுபிடிப்பதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

நேற்று தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 17 பேரில் 10 பேர் டெல்லி மாநாட்டில் தொடர்புடையவர்கள் என்ற நிலையில் இன்று கொரோனா அறிகுறியுடன் மேலும் 25 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்த 11 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |