Categories
மாநில செய்திகள்

திருநாவுக்கரசு ஜாமீன் மனு தள்ளுபடி….. பொள்ளாச்சி நீதிமன்றம் அதிரடி…!!

திருநாவுக்கரசு_க்கு ஜாமீன் வழங்க வேண்டுமென்று கோரிய வழக்கை பொள்ளாச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு  உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது .இது தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்தனர் .  இதன் முக்கிய குற்றவாளியாக  தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசையும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையம் கைது செய்தது .

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இந்நிலையில் இன்று பொள்ளாச்சி  நீதிமன்றத்தில்  திருநாவுக்கரசு  தாயார் செல்வி ஜாமீன் வழக்கு தொடர்ந்தார் . அந்த வழக்கு விசாரணையின் போது ,திருநாவுகரசு   தலைமறைவாக இருந்ததை காரணம் காட்டி நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

Categories

Tech |