Categories
உலக செய்திகள்

ஏடிஎம்-இல்…. வித்தியாச திருட்டு…. வைரலாகும் CCTV வீடியோ….!!

ஏடிஎம்மில் சானிடைசரை நபர் ஒருவர் திருடி சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் எங்கெங்கும் சனிடைசர், கையுறை, முக கவசம் உள்ளிட்டவற்றின் விலைகள் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் இயந்திரத்தை பயன்படுத்தி முடித்து விட்டு பின் வெளியே செல்லும் போது கை சுத்திகரிப்பானான  சானிடைசரை பயன்படுத்தி செல்வதற்கு ஏற்ற வகையில்,

பாட்டிலொன்று வைக்கப்பட்டிருக்கும். அதேபோல் பாகிஸ்தானின் ஒரு ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சானிடைசரை எந்திரத்தில் பணம் எடுக்க வந்த நபர் பணம் எடுத்து விட்டு அந்த திருடிச் சென்றுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |