அன்றாடம் சமையலில் பயன்படுத்தி வரும் கருவேப்பிலை குறைத்து குறித்து நாம் அறிந்திடாத மருத்துவம் உண்மைகள் பற்றிய தொகுப்பு
- கறிவேப்பிலையுடன் கரிசாலங்கண்ணி இலையின் தண்டு, மருதாணி இலை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தடவி வருவதனால் பித்த நரை மற்றும் இளநரை மறைந்துவிடும்.
- கறிவேப்பிலையுடன் சீரகம், பொரித்த வெங்காயம், மிளகு, இந்துப்பு, சுக்கு சம அளவு சேர்த்து நிழலில் உலர்த்தி பொடியாக இடித்து நெய்விட்டு கலந்து சூடான சாதத்துடன் சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் பிரச்சனை குணமடையும்.
- கறிவேப்பிலையை தொடர்ந்து உணவில் சேர்த்து வருவதாலும் கருவேப்பிலை, மிளகு, சீரகம், சுக்கு சேர்த்து தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி குடித்து வருவதாலும் சளி மற்றும் இருமல் பிரச்சினைகள் சரியாகும்.
- கருவேப்பிலை இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு மிளகாயுடன் சேர்த்து நெய்யில் நன்றாக வதக்கி உப்பு சேர்த்து துவையல் போல செய்து சாப்பிட்டு வர வாந்தி, வயிற்றுக் கோளாறு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.