தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 500 கிராம்
பட்டாணி – 50 கிராம்
நறுக்கிய பீன்ஸ் கேரட் – 1 கப்
தக்காளி – 3
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 4
தயிர் – 6 டீஸ்பூன்
புதினா – சிறிதளவு
எண்ணெய் – 6 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 3
நெய் – 3 டீஸ்பூன்
செய்முறை
- முதலில் அரிசியை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இஞ்சி பூண்டு விழுதையும் வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி, பீன்ஸ், கேரட், தயிர் மற்றும் கொத்தமல்லி சேர்த்துதேவைக்கேற்ப உப்பு போட்டு மேலும் நன்றாக வதக்கவும்.
- நன்றாக வதங்கிய பின்னர் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- கொதித்து வருகையில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து கிளறிவிடவும்.
- சிறிது நேரம் காத்திருந்து வெந்த பின்னர் இறக்கி விடலாம்.
- ருசிமிக்க காய்கறி பிரியாணி ரெடி.