சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும் முருங்கை டீ செய்முறை பற்றிய தொகுப்பு
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டுமன்றி இளைஞர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடலில் அனைத்து பாகங்களையும் பாதிக்கக் கூடிய நோயாக சர்க்கரை நோய் இருந்து வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் ஒரு மருந்தாக முருங்கை டீ இருந்துவருகிறது.
தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை பொடி – 2 தேக்கரண்டி
கிரீன் டீ பொடி – 2 தேக்கரண்டி
வெல்லம் – 2 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு – 4 தேக்கரண்டி
புதினா இலைகள் – 8
செய்முறை
- முதலில் இரண்டு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதித்தவுடன் முருங்கைக்கீரை பொடி, புதினா இலை, கிரீன் டீ பொடி, வெல்லம் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- கொதித்ததும் இதனை வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்தால் அருமையான முருங்கை டீ தயார்.
நன்மைகள்
- கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
- வாயு தொல்லை, செரிமான பிரச்சனை போன்றவற்றை குணப்படுத்துகிறது.
- இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவி புரிகிறது.
- ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
- சர்க்கரை நோயை விரட்டியடிக்க அருமருந்தாக பயன்படுகிறது.
- கண்பார்வை அதிகரிக்கும் துணைபுரிகிறது.
- மூட்டு வலியை அறவே போக்க உதவுகிறது.