Categories
அரசியல்

போருக்கு ஆயுதம் இன்றி அனுப்புவது நியாயமா? அரசை விமர்சிக்கும் கமல் …!!

கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார் 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது. மிக வேகமாக பரவும் கொரோனா தொற்று இன்று ஒரே நாளில் மட்டும் 17 பேரை பாதித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதில் மருத்துவர்களுக்கு தேவையான உடைகள், மருத்துவ சாதனங்கள் இல்லை என்ற குற்றசாட்டு எழுந்தது. மருத்துவ உபகரணகள் உடனே வாங்க வேண்டும் என்றும் பலரும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் மக்கள் நிதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |