Categories
சற்றுமுன்

குடிகாரர்களுக்கு துணை நின்ற பினராயி விஜயன்…. மருத்துவர்கள் கடும் கண்டனம் …!!

கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவுக்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்பதால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள்ளே முடங்கி கிடைக்கும் கேரள மதுபிரியர்கள் பலரும் தற்கொலை செய்யும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர ஆணையிட்டார். மருத்துவரின் பரிந்துரையின் படி குடிமகன்களுக்கு மதுபானம் வழங்க காலால் வரித்துறையினருக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தமது நிலையை விளக்கி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளை கடிதம் எழுதியுள்ளது. மருத்துவத்தை அருந்துமாறு பரிந்துரைக்க முடியாது என்று கேரள மருத்துவர்கள் சங்கம் மறுத்துள்ளது.மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைத்தால் மருத்துவம் பார்ப்பதற்கான உரிமம் ரத்தாகிவிடும் என்று மருத்துவர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |