நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கண்ணா கணவரின் சேவையைப் பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது. இந்தியாவில் இதுவரை 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

இது குறித்து அவரின் மனைவியும், எழுத்தாளருமான ட்விங்கிள் கண்ணா (twinkle khanna) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “இந்த மனிதர் என்னை எப்போதும் பெருமைப்படுத்துகிறார். இது ஒரு பெரிய தொகை என்பதால் இதுகுறித்து அக்ஷய் குமாரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், திரைத் துறைக்கு வருவதற்கு முன் என்னிடம் ஒன்றுமே இல்லை, ஆனால் தற்போது நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன்.. எதுவும் இல்லாதவர்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்வதிலிருந்து நான் எவ்வாறு பின்வாங்க முடியும் என்றார்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
The man makes me proud. When I asked him if he was sure as it was such a massive amount and we needed to liquidate funds, he just said, ‘ I had nothing when I started and now that I am in this position, how can I hold back from doing whatever I can for those who have nothing.’ https://t.co/R9hEin8KF1
— Twinkle Khanna (@mrsfunnybones) March 28, 2020