Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில்…! ”ஒரே நாளில் 2 மரணம்” 22ஆக அதிகரித்தது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 84 பேர் குணமடைந்துள்ளனர். 879 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்திருந்தது. இன்று 2 உயிரிழப்புகள் ஏற்பட்டதால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் ஒருவரும், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மருத்துவமனை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரும் உயிரிழந்துள்ளார். முன்னதாக பலி எண்ணிக்கை 20ஆக இருந்த நிலையில் தற்போது இந்தியாவில் பலி எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |