Categories
தேசிய செய்திகள்

“3 பேரும் தோப்புக்கரணம் போடுங்க”… ஐ.பி.எஸ் அதிகாரி மீது அதிருப்தியடைந்த முதல்வர்!

 கண்ணூரில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை தோப்புக்கரணம் போட வைத்த காவல் கண்காணிப்பாளரின் வீடியோ வைரலானதைப் பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தியடைந்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை (21 நாள்) அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரும் மக்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் எச்சரித்தும், தண்டனை கொடுத்தும் வருகின்றனர்.

Model punishment for lockdown violation: CM criticises Yathish ...

அந்த வகையில், கேரள மாநிலம் கண்ணூரில் ஊரடங்கு உத்தரவை மீறிய 3 பேரை அப்பகுதி காவல் துறை கண்காணிப்பாளர் யதிஷ் சந்திரா (Yathish Chandra ips ) கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதை தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த வீடியோவை பார்த்து அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ഏത്തമിടീക്കല്‍: ഇത്തരം സംഭവങ്ങൾ ...

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது, ஏனென்றால் இதுபோன்ற செயல் காவல்துறையினரால் செய்யப்படும் நல்லப்பணிகளுக்கும் களங்கம் விளைவிக்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும் கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் ட்ரோன்கள் (ஆளில்லா விமானம்) மூலம் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

Categories

Tech |