Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சுக்கு – காய்ச்சல், சளி இவற்றிலிருந்து விடுபட வைக்கும்..!!

இயற்கை வைத்திய முறைகளை பயன்படுத்தி நாம்  காய்ச்சலில் இருந்து விடுபட சுக்குவின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

 * தொண்டையில் வரட்டு இருமல் ஏற்பட்டால் சுக்கு உடன் மிளகு, சுண்ணாம்பு சேர்த்து அரைத்து தொண்டையில் பூசிவந்தால் குரல் இயல்பு நிலைக்கு வரும்.

 *  சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி அனைத்தையும் கொதிக்க வைத்து கசாயமாக செய்து பருகி வந்தால் நெஞ்சு சளி குணமாகும்.

  * எந்தவிதமான தலை வலி வந்தாலும் சுக்கை சிறிதுதண்ணீர் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் அடுத்த சில நிமிடங்களில் தலைவலி போய்விடும். வலி இருக்கும்  இடங்களில் சுக்கை அரைத்து தேய்த்தால் இதமாக இருக்கும். பின் வலி போனதும் எரிச்சல் கொடுக்கும்,  அப்படி எரிச்சல் கொடுத்தால் தலைவலி சரியாகி விட்டதென்று அர்த்தம்.

   * சுக்கோடு சிறிது பால் சேர்த்து அரைத்து, அதை சூடாக்கிய பின் மிதமான சூட்டில் கை, கால், மூட்டுகளில் வலி இருந்தால் இதை பூசி வந்தால் முற்றிலும் குணமாகும்.

  * சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து வந்தால் ஆரம்பநிலையில் இருக்கும் வாதம் விரைவில் சரியாகும்.

* சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்து வந்தால்  மந்தம் எளிதில் சரியாகும்.

* சிறிது சுக்குடன் சின்ன வெங்காயம் இரண்டையும் அரைத்து எடுத்து சாப்பிட்டால் மலக்குடலில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

* வயிற்றுப் புண் இருப்பவர்கள், தயிர்சாதத்துடன் சிறிது சுக்குப்பொடி சேர்த்து  சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.                                                                                  

 * சுக்கு ,கொத்தமல்லி இவை இரண்டையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கஷாயமாக செய்து பருகினால் மூலநோய்  விரைவில் குணமாகும்.        

                            

Categories

Tech |