கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகளுக்கு விளக்கம் பெற போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சமூக விலகலை கடைபிடிக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 42 பேர் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு , கண்காணிக்கப்பட்டு வந்தாலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து விட கூடாது என்று தமிழக அரசு பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இதில் கொரோனா தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் கேட்டு கேட்டு அறிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 91 90 35 76 67 66 என்ற எண்ணிற்கு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.