Categories
சினிமா தேசிய செய்திகள்

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க….. இளையராஜா பாடல்….. பிரபல இசையமைப்பாளர் கருத்து….!!

இளையராஜா பாடல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என பிரபல இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து தப்பிப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் முடிந்த அளவுக்கு இனிப்பு உணவு பொருட்களை தவிர்க்குமாறும், இனிப்பு உணவு பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதாகவும், மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் இனிப்பு பொருட்களை தற்போது கைவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இது குறித்து தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான எம்எம் கீரவாணி கருத்து தெரிவித்துள்ளார். அதில்,  அதிக இனிப்பு நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்பதால் அதனை முற்றிலுமாக தவிர்த்து விட்டேன். அதற்கு பதிலாக இளையராஜாவின் இனிமையான பாடல்களை கேட்டு வருகின்றேன். அதில் இருக்கும் இனிமை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |