Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு – 600,859, மரணம் – 27,417, குணமடைந்தவர்கள் -133,426 …!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 லட்சத்தை தூண்டியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி சீனாவைத் தாண்டி இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறது.

coronavirus: History repeats itself: World failed to learn lessons ...

தற்போதைய நிலையில் 600,859 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , 27,417 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , 133,426 பேர் குணமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகள் : 

அமெரிக்காவில் 104,256 பேர் பாதிக்கப்பட்டு 1,704 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் 86,498 பேர் பாதிக்கப்பட்டு 9,134 பேர் உயிரிழந்துள்ளனர் .

சீனாவில் 81,394 பேர் பாதிக்கப்பட்டு 3,295 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பென்னில் 65,719 பேர் பாதிக்கப்பட்டு 5,138 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியில் 53,340 பேர் பாதிக்கப்பட்டு 395 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ்ஸில் 32,964 பேர் பாதிக்கப்பட்டு 1,995 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானில் 32,332 பேர் பாதிக்கப்பட்டு 2,378 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |