இந்த நிலையில் தற்போது இந்தியாவுக்கு இதேபோன்ற மருத்துவமனையை கட்டிக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சீனா கூறியுள்ளது. சீன ரெயில்வே கட்டுமான கழக அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவலை மேற்கோள்காட்டி சீனாவில் இருந்து வெளிவரும் அரசு பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்’ (Global Times) இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது.
ஆனால், அதேசமயம் இந்தியா கேட்டுக் கொண்டால் மட்டுமே இதுபோன்ற மருத்துவமனை கட்டிக் கொடுக்க முடியும். அதற்கான சப்ளை பொருட்கள் அனைத்தையும் தடையின்றி இந்தியாவுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.
சீன ரெயில்வே கட்டுமான கழகம் உலகளவில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.. அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.15,00,000 கோடியாகும். வருடத்திற்கு மட்டும் ரூ.6 லட்சம் கோடி வருமானத்தை ஈட்டுகிறது. இது மிகப்பெரிய நிறுவனம் என்பதால் உலகளவில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் அந்த நிறுவனம் கட்டுமானத்தில் முறைகேடு செய்ததாக உலக வங்கி குற்றம்சாட்டி, 9 மாதங்கள் அதற்கு தடை விதித்திருந்தது. அந்த நிறுவனம் தான் தற்போது இந்தியாவில் மருத்துவமனையை நாங்கள் கட்டிக்கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளது. ஆனால் இந்தியா இதை ஏற்றுக்கொள்ளுமா? என்று தான் தெரியவில்லை.
அதே வேளையில், இந்தியா ஏராளமான வென்டிலேட்டர் கருவிகள், என்-95 முககவசங்கள் மற்றும் அவசரகால நோய் தடுப்பு சாதனங்கள் ஆகியவற்றை சீனாவில் இருந்து வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது.