நான் வீட்டில் தனிமைப்படுத்தியதாக வெளியான செய்தி உண்மையில்லை என நடிகர் கமல் விளக்கம் அளித்துள்ளார். ஆழ்வார்பேட்டை முகவரியில் சில ஆண்டுகளாக வசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. வரும் முன் தடுக்கும் நடவடிக்கையாக 2 வாரங்களாக நானே தனிமைப்படுத்தி கொண்டேன். அன்புள்ளம் கொண்ட அனைவருமே அவ்வாறே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நடிகர் கமலஹாசன் தனிமையில் இருக்க வேண்டுமென அவர் வீட்டின் முன் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. ஏப்ரல் 6ம் தேதி வரை அவரை தனிமையில் இருக்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியது. இதனையடுத்து மய்யத்தை ஓரம் கட்ட முயற்சி என கட்சியினர் குற்றம் சாட்டினர். தகவல் தெரிவிக்காமல் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
இந்த சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டவர் வீடு என்ற நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். மேலும் பாஸ்போர்ட் முகவரியை கொண்டு கமல்ஹாசனின் பழைய முகவரியில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் கொரோனா நோட்டீஸ் அகற்றப்பட்டது என மாநகராட்சி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.