கன்னியாகுமரியில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது நபர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து ஊர் திரும்பிய நிலையில் கொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கொரோனா தொற்று குறித்த பரிசோதனை அறிக்கை வராத நிலையில் முதியவர் உயிரிழந்துள்ளார். இவரது மகன் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குமரியில் கொரோனா வார்டில் உயிரிழந்த நபரின் பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை என உறுதியானது.
கொரோனா வைரசால் மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. மேலும் 39 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.