நெருங்கிய நண்பரான சேதுராமனின் இழப்பு நடிகர் சந்தானத்திற்கு பெரும் இழப்பாக இருந்த நிலையில் அவரது உடலை தன தோளில் தூக்கி சென்று பார்ப்போரை நிலை குலைய வைத்தது..!
ஒருவருக்கொருவர் நண்பனாக இருக்கும் பொழுது உண்மையான நண்பர் என்ன செய்வார், தன்னுடைய நண்பனை எப்படியாவது ஒரு உயரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைப்பார். அதனால் அவர் வாழ்க்கையில் பல கட்டங்களில் சேதுராமனை தூக்கி விட முயற்சி செய்தார். அப்படி தூக்கிவிட்டு உயரத்திற்கு கொண்டு வந்தவர் நடிகர் சந்தானம்.
அவரால் உயரத்திற்கு வந்தவர் யார் என்றால் நடிகருமான, மருத்துவருமான சேதுராமன். அவர் வாழ்க்கையில் உயரத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் இன்றைக்கு சொல்லி கதறி அழுகிறார். வாழ்க்கையில்தான் நான் இவரை உயர்த்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இன்றைக்கு இவரை பிணமாக என் தோளில் உயர்த்தி விட்டேனே என்று அழுதுகொண்டே, சந்தானம் சேதுராமனின் உடலை தன் தோளில் சுமந்து எடுத்துக்கொண்டு போன காட்சி அனைவரையும் நெஞ்சை உருக வைத்தது.
சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் கதாநாயகனாக டாக்டர் சேதுராமனின் அறிமுகம் செய்து நடிக்க வைத்து ஒரு நல்ல திரைப்பட புகழுக்கு கொண்டு வந்தார். அதற்குப் பின்னாடி வாலிபராஜா, சக்கபோடு போடு ராஜா அதுமாதிரியான நிறைய படங்களில் கதாநாயகனாகவும், துணை பாத்திரத்திலும் நடித்தார்.
அதில் சந்தானமும் இந்த சேதுராமன் ஒரு நெருங்கிய நண்பர்கள் ஆவர். MBBS டாக்டர் இவர். ஒரு சிறப்பான முறையில் தோல் நோய் சம்பந்தப்பட்ட படிப்புகளை படித்து அதில் ஸ்பெஷலிஸ்டாக இருந்தார். அதற்காகவே அவர் தனியாக ஒரு மருத்துவமனை தோல் நோய் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி திறந்து வைத்தார். அந்த திறப்பு விழாவிற்கு அவருடைய நெருங்கிய நண்பரான சந்தானம், அது போன்ற மற்ற திரைப்படத்துறையில் உள்ள தனது நெருங்கிய நண்பர்களை வரவழைத்தார்.
திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல் இவர், பொதுவாக மக்களுக்கு நிறைய உதவிகள் செய்வது நண்பர்களுக்கு உதவி செய்வது என இயற்கையான சூழ்நிலையில் எடுத்துச் சொல்வது அதுபோல கனிவாகப் பேசுவது இந்த மாதிரியான விஷயங்களில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். இவரது பிரிவு அனைவரையும் வருத்தத்துக்குரியது ஆக்குகிறது.
அவர் கடைசியாக பேசிய பேச்சு பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் பேச்சாகவே இருந்தது. கொரோனா என்ற நோய் உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அது படிப்படியாக நம் இந்தியா, தமிழ்நாடு என வந்துவிட்டது. இந்த தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் மிகவும் கடுமையாக முயற்சி எடுத்து இந்த கொரோனோவை ஒழிப்பதற்கு முயற்சி எடுக்கிறார்கள்.
அப்படி ஒரு காலகட்டத்தில் மக்கள் தனிமையாக இருக்க வேண்டும் எனவும் கும்பல் கூட கூடாது அதனால் சமூக கட்டுப்பாடு வேண்டும் என்றும் ஒரு கவலையான செய்தி மக்களிடம் கூறினார். அவர் கடைசியாக பேசிய பேச்சு கூட பொதுமக்கள் நலன் சார்ந்ததாக தான் இருந்தது. அப்படி பேசுபவருக்கு என்னமோ இயற்கை அவருடைய ஆயுளுக்கு ஒரு இறுதி கட்டத்தை கொண்டு வந்து விட்டது.
இது நிச்சயமாக சேதுராமனும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவரின் நெருங்கிய நண்பருமான சந்தானமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அனைவரையும் பார்த்து இலகிய அவரது உள்ளம் என்னமோ ஓய்வெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டது.
26ம் தேதி அன்று இரவு சுமார் 8 மணிக்கு நெஞ்சுவலி என்று கூறினார். 8. 45க்கு அவருடைய உடலில் இருந்து உயிர் பிரிந்து போய் விட்டது. இதை தாங்க முடியாத அவரது குடும்பம் அதை பார்த்து கதறி அழுகிறார்கள். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆகியது. திரைப்படத்தில் கதாநாயகனாக இவர் உண்மையிலேயே பார்ப்பதற்கு அழகா, செவப்பா, இருப்பார். அதேபோல அவரது மனைவியும் அழகாக இருப்பார். இவருக்கு அழகான ஒரு குழந்தை.
இப்படி ஒரு அழகிய குடும்பமானக இருந்த சேதுராமனின் குடும்பம் எப்படியோ யாரு கண்ணு பட்டதோ என்று தெரியாமல் இன்றைக்கு அது சிதைந்து விட்டது. சேதுராமன் இறந்ததாய் கண்ட அவரின் மனைவி அலுவதையும், நண்பர்கள் அழுத்தத்தையும் பார்ப்பவர்களுக்கு நெஞ்சை உறைய வைக்கும் ஒரு காட்சியாக இருந்தது.
இளம் வயதில் உள்ள ஒரு நண்பரை இளகிய மனம் உள்ள நண்பரை இழந்து விட்டோமே என்கிற வருத்தத்தோடு வேதனையோடும் அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார்கள். உலகத்திற்கு புத்தி சொன்ன ஒரு மருத்துவர் சிறந்த நடிகர் இன்றைக்கு மரணமாகி தன்னுடைய இறுதி பயணத்தை தொடங்கி விட்டார். யாருமே நினைத்துப்பார்க்க முடியாத ஒரு சோக நிகழ்வாக இருக்கிறது.
அப்படிப்பட்ட இந்த இறுதி சடங்கு நிகழ்வு நடந்து முடிந்திருக்கிறது. இந்த இறுதி சடங்கில் சந்தானம் தன்னுடைய நண்பனை தோள் மீது சுமந்து, அது உயிரற்ற உடலை சுமந்து அவர்களுடைய பல நினைவுகளையும் சேர்ந்து சுமந்தார். அதையெல்லாம் அவர் நினைத்து குலுங்கி குலுங்கி அழுகிறார். மற்றவர்களெல்லாம் சந்தானத்தை தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்கிறார்கள். இப்படி ஒரு நட்பு அவர்களுக்குள் இருக்கிறத என்று இந்த இறுதிப் பயணம் உணர்த்துகிறது.
அதை எப்படியோ ஒரு நண்பரிடமிருந்து உருக்கமான கண்ணீரை வரவழைக்கும் அளவிற்கு ஒரு சிறந்த நண்பனாக இருந்த சேதுராமன் நண்பர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கும் ஒரு நல்ல மருத்துவராகவும் இருந்திருக்கிறார். ஒரு நல்ல மருத்துவரை நல்ல திரைப்பட நடிகரை எல்லா சமூகத்திலும் நல்லபடியாக பழகக்கூடிய ஒரு மனிதாபிமானம் கொண்ட மனிதரை நாம் தமிழகம் இழந்து விட்டோம் என்பதுதான் உண்மை.