நிம்மதியுடன் வாழ்வதற்கான வழிகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழகான வரிகளில் கூறிருக்கிறார்..!
அகிலத்தில் வாழும் மனிதர் அனைவருக்கும் மனக்குறை என்பது அவசியம் இருக்கும். அதில் ஒருவன் வேகம் என்று வருந்துவான், இன்னொருவன் அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவார். செல்வம் இருந்தும் நிம்மதியற்றவரும் உண்டு. சிலருக்கு அச்செல்வம் இல்லையே என நிம்மதி இருக்காது.
இது போன்ற உதாரணங்கள் ஏராளம். தாம் அனைத்தையும் பெற்ற மனிதரை இந்த உலகில் சந்தித்திருக்கிறிர்களா, குறையோடு வாழும் மனிதர்கள் அந்த ஒரு குறையை வாழ்வில் மையமாக்கி வாழ்கின்றனர். இப்படிபட்ட காரணத்தால் இதயத்தில் துக்கமும் வேதனையும் குடி கொள்ளத் துவங்குகிறது.
வேதனையும் தினமும் மரணம் வரை நீடிக்கின்றது. அவ்வாறு உருவான அந்த சூழலானது மானிடருக்கு பழகிய ஒன்றாகும். வேறுசிலர் பற்றியும் கூறத்தான் வேண்டும். தங்களுக்கு உருவான குறையை ஒரு சிலர் தம் சாமர்த்தியமாக செய்லபடுத்துகின்றனர். அவருக்கும் எல்லோருக்கும் என்ன வேறுபாடு என்று நாம் இதுகுறித்து சிந்தித்ததுண்டா.
இதற்கான விடை மிக எளிது.. எவர் குறைகளை வென்று காட்டுகிறாரோ, அவரே தனது சாமர்த்தியம் கொண்டு அதை வீழ்ச்சியடைய செய்கிறாரோ, அவர் அதை கடந்த நிலைக்குச் செல்கிறார் என்றும், குறை ஏற்படுவது இயல்பு ஆனால் அக்குறையை மதி கொண்டு வெல்லும் மானிடர் தான் மதிக்கப்படுவார்கள். சிந்தித்து செயலாற்றுங்கள்..!